பைக்கில் சென்ற தம்பதி; வழிமறித்த போலீஸ் - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
போலீசாரின் அவசரத்தால் மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மறித்த போலீஸார்
மாண்டியா, கொரவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்(32). இவரது மனைவி வாணி(27). இவர்களுக்கு மூன்றரை வயதில், ஹிருதீக்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் குழந்தை வீட்டின் வெளிப்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை தெரு நாய் கடித்துள்ளது. உடனே பெற்றோர் குழந்தையை பைக்கில் அமர்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்துள்ளனர்.
குழந்தை பலி
அந்த சமயம் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். தொடர்ந்து, அசோக்கின் பைக்கை வழிமறித்துள்ளனர். இதனால் பைக் நிலை தடுமாறி, மூவரும் விழுந்தனர்.
இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தையின் பெற்றோரும் பொதுமக்களும் மருத்துவமனை முன் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக, ஜெயராம், நாகராஜு மற்றும் குருதேவ் ஆகிய 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.