குர்குரே பிடிக்கும்மா.. ஆனால் திருடல; தற்கொலைக்கு முன் 12 வயது சிறுவன் உருக்கமான கடிதம்!
தற்கொலைக்கு முன் 12 வயது சிறுவன் எழுதிய கடிதம் கலங்கடித்துள்ளது.
திருடியதாக புகார்
மேற்கு வங்கம், மெதினிபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ்(12). 7 ம் வகுப்பு படித்து வந்தான். இவர் தினமும் கடைக்கு சென்று ‛குர்கிரே' வாங்கி தின்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளான்.
அதன்படி கிருஷ்ணேந்து தாஸிடம் காசு இருந்ததால் குர்குரே வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அங்கு கடைக்காரர் கடையில் இல்லாதாதல் சிறுவன் வீடு திரும்பியுள்ளான். அப்போது தெருவில் குர்குரே பாக்கெட் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து பிரித்து சாப்பிட்டுள்ளார்.
இதனை கண்ட கடைக்காரர் ஆள் இல்லாத நேரத்தில் கடையில் இருந்து சிறுவன் குர்குரேவை திருடியதாக நினைத்து விரட்டி சென்று பிடித்து தாக்கியுள்ளார். மேலும் சிறுவனது தாயையும் வரவழைத்து கடுமையாக சாடியுள்ளார். உடனே, கடைக்காரரிடம் சிறுவனின் தாய் மன்னிப்பு கோரிய நிலையில் இருவரும் வீடு திரும்பினர்.
சிறுவன் தற்கொலை
இதனையடுத்து வீடு திரும்பிய சிறுவன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டான். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தான்.
உடனே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அங்கு அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சிறுவன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில், , ‛‛அம்மா நான் திருடன் இல்லைமா.. நான் குர்குரே திருடவில்லை. கடைக்கார மாமா கடையில் இல்லாததால் சாலையில் கிடந்த குர்குரேவை தான் எடுத்தேன் அம்மா..
எனக்கு குர்குரே ரொம்ப பிடிக்கும் அம்மா.. நான் உண்மையில் திருடவில்லை. இதுதான் எனது கடைசி வார்த்தைகள்.. தற்கொலை செய்த என்னை மன்னித்து விடுங்கள் அம்மா'' என்று எழுதியுள்ளான். இதன் அடிப்படையில், போலீஸார் விசாரணையை தொடங்கிய நிலையில், கடைக்காரர் சுபாங்கர் தீக்சீத் தலைமறைவாகியுள்ளார்.