தனக்கு தானே பிரசவம் - குழந்தையை கழிவறையில் அமுக்கி கொன்ற கொடூர தாய்!
பெண் குழந்தையை கழிவறையில் அழுத்தி தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையில் பிரசவம்
அரியலூர், கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா(20). லாராவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தந்தையை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியில் நின்றுள்ளார்.
தாய் வெறிச்செயல்
ஆனால் லாரா 3 மணி நேரம் அங்கேயே இருந்துள்ளார். அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் உள்ளே தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது.
அந்த நேரத்தில் மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவறைக்கு வந்துள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி விரைந்து வந்த போலீஸார் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவறை கோப்பையை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தனர்.
இதற்கிடையில் லாரா அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அவரை பிடித்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.