ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்..என்ன நடந்தது? பரபரப்பு சம்பவம்!
ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ மீது தாக்குதல் நடந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பெண் எஸ்.ஐ
சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வசிக்கும் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் சீதா. இவர் மதுபோதையில் தனது 6 வயது குழந்தையை பொது இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதாகவும், அரை நிர்வாணத்தோடு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.பி சத்திரம் உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, மது போதையில் அரை நிர்வாணமாக இருந்த பெண்ணை அருகில் இருந்த பெண்களிடம் இருந்து உடை வாங்கி அவருக்கு கொடுத்ததோடு,
என்ன நடந்தது?
அவரிடம் இருந்து 6 வயது குழந்தையை மீட்க முயன்றுள்ளார். அப்போது திடீரென அந்த இளம்பெண், உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வியை தாக்க தொடங்கியுள்ளார். இதில் பெண் எஸ்.ஐ கலைச்செல்வியின் முகத்தில் நகக் கீறல், வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து டி.பி சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், இந்தச் சம்பவம் குறித்து டி.பி சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, கடந்த 13-ம் தேதி ரோகித் ராஜ் என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.