தப்பியோட முயன்ற ரவுடி..துரிதமாக செயல்பட்ட போலீசார் - அடுத்து நடந்த சம்பவம்!
தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் மீண்டும் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய ரவுடி..
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரோகித் ராஜ். சரித்தப்பதிவேடு குற்றவாளியான இவர் மீது மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலை வழக்குகள் உள்ளது. மேலும், அடிதடி, மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் தேனியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை போலீசார் தேனிக்கு விரைந்து அங்கு பதுங்கி இருந்த ரோகித்தை கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
நகை கடையாக வலம் வந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் சிக்கினார் - கூட்டாளியை சுட்டுக்கொன்று ஆற்றில் வீச்சு..!
நடந்த சம்பவம்
கைது செய்யப்பட்ட ரவுடி ரோகித் சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், சென்னைக்கு வந்த ரவுடி ரோகித்தை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இடங்களுக்கு போலீசார் இன்று அதிகாலை கொண்டு சென்று வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர்.
பின்னர், சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்தியபோது ரவுடி ரோகித் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதனையடுத்து, தப்பிச் சென்ற ரவுடி ரோகித்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரோகித் ராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.