டிக்கெட் எடுக்க முடியாது...பேருந்தில் காவலர் தகராறு - போக்குவரத்துத்துறை கொடுத்த ட்விஸ்ட்!

Thoothukudi Tamil Nadu Police Tirunelveli
By Swetha May 22, 2024 11:16 AM GMT
Report

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த காவலர் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது.

பேருந்தில் காவலர் 

திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஆறுமுகப்பாண்டி எனும் காவலர் ஏறியுள்ளார். வழக்கம் போல் நடத்துனர் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அதற்கு, "தானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

டிக்கெட் எடுக்க முடியாது...பேருந்தில் காவலர் தகராறு - போக்குவரத்துத்துறை கொடுத்த ட்விஸ்ட்! | Police Refuses To Take Ticket In Bus Video Viral

மேலும், "அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கட் எடுக்க தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கு டிக்கெட் கிடையாது" என்று தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நடத்துனர்,"அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வேண்டும் என்றால் வாரண்ட் வேண்டும்.

நான் போலீஸ் இல்ல பொறுக்கி..சாலையில் அரை நிர்வாணமாக நின்று தகராறு செய்த டிராபிக் போலீஸ்

நான் போலீஸ் இல்ல பொறுக்கி..சாலையில் அரை நிர்வாணமாக நின்று தகராறு செய்த டிராபிக் போலீஸ்

போக்குவரத்துத்துறை 

வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் கிடையாது. அதனால், டிக்கெட் கண்டிப்பாக எடுக்க வேண்டும்" என்று இவ்வளவு கூறியும் காவலர் விடாப்பிடியாக இருந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஆனது. இதனால் அரசு பேருந்தில் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமா.. வேண்டாமா.. என்று கேள்வி எழுந்தது.

டிக்கெட் எடுக்க முடியாது...பேருந்தில் காவலர் தகராறு - போக்குவரத்துத்துறை கொடுத்த ட்விஸ்ட்! | Police Refuses To Take Ticket In Bus Video Viral

இந்த நிலையில், போக்குவரத்து துறை இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாகவெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.

மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.