Thursday, Jul 3, 2025

இரவு 7 மணிக்கு வெளியே சென்றது ஏன்? பாலியல் புகாரை ஏற்க மறுத்த காவல்துறை

Uttar Pradesh
By Karthikraja a year ago
Report

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் புகாரை ஏற்க காவல்துறை மறுத்துள்ளது.

பாலியல் சீண்டல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இரவு 7.30 மணியளவில் மழை பெய்யும் போது அதை ரசித்து வீடியோ எடுக்க வீட்டின் வெளியே சென்றுள்ளார். 

girl in rain

அப்பொழுது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர், தன்னை தகாத முறையில் தொட்டு, தான் அணிந்திருந்த ஷார்ட்ஸை கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இரு பெண்கள் அங்கு வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். 

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

வீடியோ

இதனையடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரிடம், நீங்கள் ஏன் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றீர்கள் என கேட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். 

இதனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறை இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.