இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்
இரவுகளில் மனைவியை பார்க்க வந்த காதலன் கணவரிடம் சிக்கியுள்ளார்.
இரவில் சந்திப்பு
பீகார் மாநிலம் ராம்நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(26). இவருக்கு குஷ்பு(22) என்பவருடன் திருமணமாகி 2 வயதில் மகன் உள்ளார். இவர்கள் ராஜேஷ் குமாரின் தாய் தந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களாக, குஷ்புவின் பால்ய காதலனான சந்தான் என்பவர் இரவு நேரங்களில் வந்து குஷ்புவை சந்தித்து சென்றுள்ளார். ஒரு நாள் வீட்டிற்கு வந்த பொழுது ராஜேஷ் குமாரின் பெற்றோரிடம் கையும் களவுமாக சந்தான் சிக்கியுள்ளார்.
திருமணம்
இதை பற்றி கேள்விப்பட்ட ராஜேஷ் குமார் கோபப்படாமல், குஷ்புவை சாந்தனுக்கே கிராம மக்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது குஷ்பு சந்தானுடன் வசித்து வருகிறார்.
தன்னுடைய காதலை புரிந்து கொண்ட ராஜேஷ் குமாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த செயலுக்கு ராஜேஷின் பெற்றோரும் ஆதரவாக இருந்துள்ளனர். ராஜேஷ் குமாரின் இந்த செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
