புதிய சிக்கலில் யூடியூபர் டி.டி.எப்.வாசன்; கடையில் நடந்த சோதனை - என்ன நடந்தது?
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் கடையில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
டிடிஎப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனையடுத்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து 45 நாட்கள் பிறகு டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இங்கு அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர், ஹாரன் உள்ளிட்டவை விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன் பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். பின்னர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது என்றும்,
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடையின் மேலாளரை எச்சரித்தனர். மேலும், இது குறித்து டி.டி.எப்.வாசனிடமும் செல்போன் மூலம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.