தவெக முதல் மாநாடு; அனுமதி வழங்கிய போலீஸ்..ஆனால் 17 நிபந்தனைகள் - என்ன தெரியுமா?
தவெக முதல் மாநாடுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
மாநாடு
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், கட்சியின் முதல் மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்தத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அலங்கரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்தது.
இந்த சூழலில் அவரது முதல் மாநாடு நடத்த ஏராளமான சிக்கல் உருவாகி தள்ளிபோய்கொண்டே இருந்த நிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மனு அளித்திருந்ததற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
நிபந்தனைகள்
மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
- மாநாடு நடைபெறும் நாளன்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
- வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்
- சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தக் கூடாது கட்டாயம் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள், மருத்துவ வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும்.
- குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும்
- பேனர், வளைவுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கக் கூடாது - முக்கிய தலைவர் விஜய் மாநாட்டிற்கு வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும்.
-
மாநாடு திடலில் எல்இடி திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதோடு, திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.