திருநங்கையுடன் திருமணம்.. நெருக்கத்தில் வசமாக சிக்கிய காவலர்!
திருநங்கையை திருமணம் செய்து நகைகளை பறித்துவிட்டு காவலர் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருநங்கையுடன் திருமணம்
திருச்சி, மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை பவிதா ரோஸ். இவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் காவலர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யும் பணியை செய்து வந்திருக்கிறார்.
அப்போது, கடலூர், குமராட்சியைச் சேர்ந்த கார்த்திக் என்ற காவலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் காவலரை தனது வீட்டில் வைத்து நூறு பேருடன் உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.
நகை பறிப்பு
அதன்பின் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, பவிதா மூலம் கார்த்திக் தனது தந்தை பெயரில் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனையடுத்து கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பவிதாவை வீட்டில் இருந்த கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு வாயில் துணியை அடைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள திருநங்கை கூறுகையில், காவலர் கார்த்திக் ஒரு 'கே' என்பதை நான் நெருக்கமாக இருந்தபோது கண்டுபிடித்துவிட்டேன். ஆகையால் என்னை அவர் அடித்து கட்டிபோட்டுவிட்டு என்னிடம் இருந்த நகைகளை எடுத்து சென்றுவிட்டார்.
காவலர் மீது புகார்
என் மீது ஆசைப்படும் ஆண்கள் தேடி வருகிறார்கள். கல்யாணம் செய்துவிட்டு படுக்கையில் இருந்துவிட்டு பின்னர் என்னிடம் உள்ள சொத்துக்களுக்கு குறி வைக்கின்றனர். நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கமாட்டேன்.
பிறரது குடும்பம் என்னால் சீரழிய நான் விரும்பமாட்டேன். ஆனால், என்னை தேடி வருபவர்கள் என்னை பயன்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மேலும், காவலரிடம் இருந்த பாவிதாவின் செல்போனில் இருந்த புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாகவும்,
அதில் தென்னிந்திய திருநங்கைகள் நல சங்கத்தின் செயலாளர் அருணா அவமானப்பட்டு வருவதாகவும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.