கடமை.. கடமை என்று வீட்டுக்கு வருவதில்லை -போலீஸ்காரர்களின் மனைவிகள் போராட்டம்!
போலீஸ்காரர்களின் மனைவிகள் குழந்தைகளுடன் நடுரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்
தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ்காரர்களுக்கு நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை இல்லாமல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் போலீஸ்காரர்கள் பலர் வீட்டிற்கு செல்லும் நேரம் குறைந்து அதிக நேரம் பணியில் ஈடுபடுகின்றனர்.
போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வருவதால் அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது, நல்கொண்டா, நிஜாமாபாத்தில் உள்ள டிச்பல்லி, வாரங்கலில் உள்ள மாமன்னூர் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில்
மனைவிகள்
போலீஸ்காரர்களின் மனைவிகள், குழந்தைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபடியும் இரண்டாவது நாளாக ஜோகுலாம்பா கட்வால் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் பல்வேறு பட்டாலியன்களைச் சேர்ந்த போலீஸ்காரர்களின் மனைவி, குழந்தைகள் குடும்பத்தோடு நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் கைகளில் பல்வேறு கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
விடுப்பு இல்லாமல் நீண்ட நேரம் பணி செய்ய வைப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், "எங்களது கணவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதில்லை. கடமை என்ற பெயரால், வீட்டுக்கு வருவதே இல்லை. எங்களிடமிருந்து விலகி இருக்க வைக்கப்படுகிறார்கள் என்றனர்.