புகாரளிக்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் - காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!
திருச்சியில் புகாரளிக்க வந்த பெண்ணிற்கு அங்குள்ள இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகைரளிக்க வந்த பெண்
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கிரிஜா, இவர் திருச்சியில் உள்ள பாலக்கரை பகுதியில் கிருஷ்ணன்கோவில் தெரு அருகே தனியாக வசித்து வருகிறார்.
இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர், கல்லூரி மாணவர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
மேலும் அவர் அங்கு உள்ள காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு புகாரளிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் இவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், அவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரியான சுகுமார் வாங்கி வைத்துக்கொண்டார்.
என்னைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்த காவல் ஆய்வாளர் சுகுமார் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் என்னை ஊரை விட்டு துரத்துவேன் எனக்கூறினார்.
என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளார். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கக் கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, இன்ஸ்பெக்டர் சுகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.