உதவி கேட்ட சிறுமி - பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர்
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமி
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தனது வீட்டை விட்டு மாயமாகியுள்ளார். அதன்பிறகு பட்டினபாக்கம் அருகே இருந்த காவலர் ராமன் என்பவரிடம் வழி தவறி வந்து விட்டதாக உதவி கேட்டுள்ளார்.
ஆனால் காவலர் ராமனோ சிறுமியை போலீஸ் பூத்திற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலீஸ் வாகனத்தில் வைத்தும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
பாலியல் தொல்லை
இதனையடுத்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர் ராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராமன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 16 வயது ஆண் நண்பரும், அதற்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரின் தாயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.