Friday, Feb 21, 2025

10 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - 22 வயது ஆசிரியை செய்த கொடுமை

Sexual harassment Maharashtra Bengaluru
By Karthikraja 22 days ago
Report

 10 வயது சிறுவனை பள்ளி ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம், தானே(Thane) நகரை சேர்ந்த 10 வயதான சிறுவன் ஒருவன், பெங்களுருவில்(bengaluru) உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

thane boy in bengaluru madarasa

அந்த பள்ளியில் பணியாற்றி வந்த 22 வயதான ஆசிரியை ஒருவர், கடந்த 6 மாதங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கொலை மிரட்டல்

மேலும், இது குறித்து வெளியே சொன்னால் உன்னையும் உன் பெற்றோரையும் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

thane boy in bengaluru madarasa

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பெண் ஆசிரியை மீது தானே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்அடிப்படையில், ஆசிரியை மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.