கொடி கம்ப விவகாரம்!! அண்ணாமலையின் திட்டத்திற்கு செக் வைத்த காவல் துறை!!
கொடி கம்ப விவகாரத்தில் தமிழக பாஜகவிற்கு தமிழக காவல் துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை கொடுத்துள்ளது.
கொடி கம்ப விவகாரம்
சென்னை பனையூரில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் நீக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக வட்டாரத்தில் அது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி கைதானது, 10000 கொடி கம்பங்கள் நடுவோம் என அண்ணாமலை அறிவித்தது என தொடர்ந்து கொடி கம்ப விவகாரத்தில் பாஜகவினர் மும்முரம் காட்டி வருகின்றார்.
அரசியலாக மாறும் இந்த விவகாரத்தில் ஆளும் அரசின் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவே பாஜகவினர் பேசி வரும் நிலையில் தான் தற்போது, அக்கட்சிக்கு தமிழக காவல் துறை அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளது.
அனுமதி மறுத்த காவல் துறை
அதாவது பொது இடங்களில் இது போன்று கட்சி கொடி கம்பங்கள் நடப்படுகிறது என்றால் முறையாக நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் இருந்து அனுமதி பெற்று அக்கடிதத்தை போலீசாரிடம் அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட பிறகு, அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படும். ஆனால், மாநகாராட்சியில் இருந்து அனுமதி பெற்றதற்கான எந்தவித கடிதமும் இணைக்கவில்லையென என இதன் காரணமாகவே அனுமதியை காவல் துறை சார்பில் மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அண்ணாமலை இன்று முதல் அதாவது நவம்பர் 1-ஆம் தேதியில் துவங்கி 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும் என கூறி, வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை பனையூரில் 10000 கொடி நடப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.