திருப்பி அடிச்சா முழுசா காணாம போயிடுவீங்க.. ரொம்ப நாள் நிலைக்காது - அண்ணாமலை எச்சரிக்கை!

DMK BJP K. Annamalai
By Vinothini Oct 31, 2023 10:11 AM GMT
Report

 திமுக ரவுடிகள் குறித்து அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெண்டர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கிரானைட் கல் குவாரி ஏலத்திற்காக டெண்டர் பெறப்பட்டது. இதில் விண்ணப்பிப்பதற்காக ஏராளமானோர் வந்தனர்.

annamalai-condemns-dmk-for-attacking-bjp-cadre

இதில் பாஜக தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவரான கலைச்செல்வன் தனது தம்பியுடன் வந்துள்ளார், அதில் ஆளும் கட்சி மற்ற கட்சியினர் குவாரி குத்தகைக்கு விண்ணப்பிப்பதை தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதில் கலைச்செல்வன் தாக்கப்பட்டார், 300க்கும் மேற்பட்டோர் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தாக்குதலில் ஈடுபட்ட 10 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் எதிர்ப்பு.. கற்களை வீசி விரட்டிய மக்கள் - பரபரப்பு!

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் எதிர்ப்பு.. கற்களை வீசி விரட்டிய மக்கள் - பரபரப்பு!

அண்ணாமலை

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலை தள பக்கத்தில், "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும்.

உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.