15 லட்சம் ஏமாற்றம்; மகாலெட்சுமி கணவர் செய்த செயல் - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Ravindar Chandrasekaran Mahalakshmi
By Sumathi Jun 28, 2023 07:00 AM GMT
Report

பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது.

 ரவீந்தர் 

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

15 லட்சம் ஏமாற்றம்; மகாலெட்சுமி கணவர் செய்த செயல் - கொந்தளிக்கும் ரசிகர்கள்! | Police Complaint Against Mahalakshmis Husband

இந்நிலையில், ரவீந்தர் மீது சென்னை அண்ணாநகரை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது.

பண மோசடி புகார்

கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, ரவீந்தர் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தர வேண்டும் எனக்கூறி என்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டார். அதற்கு நான் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறி ரவீந்தரின் லிப்ரா புரொடக்‌ஷன் வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாய் அனுப்பினேன்.

15 லட்சம் ஏமாற்றம்; மகாலெட்சுமி கணவர் செய்த செயல் - கொந்தளிக்கும் ரசிகர்கள்! | Police Complaint Against Mahalakshmis Husband

பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர் அதே ஆண்டு மே மாதம் 25-ம் தேதி 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால், ரவீந்தர் சொன்னது போல் பணத்தை திருப்பி தரவில்லை, பணம் குறத்து அவரிடம் கேட்டபோது தொடர்ந்து அலை கழித்து, அவதூறாக பேசியதுடன்,

ஒரு கட்டத்தில் எனது செல்போன் எண்ணை ரவீந்தர் பிளாக் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரவீந்தர், விஜய்க்கு பணம் தர ஒப்புக்கொண்டு செக் அனுப்புவதாக தெரிவித்துள்ளேன். ஆகவே விஜய்யும், நானும் சமாதானமாக செல்ல உள்ளேன். விஜய் புகாரை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.