IPL 2023; சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி - பதற்றம்..!
சேப்பாக்கத்தில் சென்னை அணி மோதும் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை வாங்க காத்திருந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
CSK Vs LSG
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வெற்றி பெற முயன்று வருகிறது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோத உள்ளது.
இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.
ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
வருகிற மே 6-ஆம் தேதி சென்னையில் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிக்கெட்டை வாங்க ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் இரவு முதல் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.