போராடி தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்
ரன்களை குவித்த ராஜஸ்தான்
16வது ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஜெய்ஸ்வால் 77 ரன்களும், துருவ் ஜுரல் 34 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 202 ரன்கள் குவித்தது.
திணறிய CSK வீரர்கள்
இதன்பின் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்கமே சரியாக அமையவில்லை.
16 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கான்வே வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹானே 15 ரன்களிலும், அடுத்ததாக களமிறங்கிய அம்பத்தி ராயூடு ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.