சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..புகாரளிக்க வந்த பெற்றோரை தாக்கிய போலீஸ் - பகீர் சம்பவம்!
பாலியல் வன்கொடுமை செய்தவன் மீது புகார் அளித்த பெற்றோரை தாக்கியது குறித்து விசாரனை நடக்கிறது.
பாலியல் வன்கொடுமை
10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது புகார் கொடுக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்ய பிரகாசம் ஆஜராகி, , ஒரு நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முறையீடு செய்தார்.
அப்போது அவர், ‘‘அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி,அரசு பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். அவரை பக்கத்து வீட்டில்வசிக்கும் சதீஷ் என்ற இளைஞர் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்,
பெற்றோரை..
சதீஷ் மீது புகார் அளிக்க அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.அப்போது பணியில் இருந்த பெண்காவல் ஆய்வாளர் ராஜி மற்றும் சிலஆண் போலீஸார் புகார் கொடுக்க வந்தசிறுமியின் பெற்றோரிடம் புகாரில் இருந்து சம்பந்தப்பட்ட
இளைஞர் சதீஷின் பெயரை நீக்க வற்புறுத்தி அடித்து தாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. எனவே இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என முறையிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், அந்த நாளிதழ் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, ஒப்புதலுக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.