உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்
நைஜீரியா நாட்டில் உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரிய, இதற்கு முக்கிய காரணங்கள் வறட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும்.இந்தநிலையில், அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, திடீரென போலீசார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.