தியேட்டருக்குள் குத்தாட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்; அதிரடியாக தூக்கிய போலீசார்!
நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை போலீஸ் வெளியேற்றி இருக்கிறார்கள்.
விஜய் ரசிகர்கள்
கடந்த சில மாதங்களாகவே பழைய சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் இடையே அமோகமான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகா 90ஸ் கிட்ஸ் ஒவ்வொரு படங்களை கொண்டாடி ரீலிஸ் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரீலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகளவில் ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியாகிய மூன்று நாட்களிலேயே ரூ. 12 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து புதுப்படங்களுக்கு இணையாக டஃப் கொடுத்தது கில்லி.
தூக்கிய போலீசார்
இந்த சூழலில் தியேட்டரிலும் ரசிகர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் ஸ்கிரீன் முன்பு ஆடிப்பாடி கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அந்த வகையில் அவரது கில்லி படம் லண்டனிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தைப் போலவே, லண்டனில் உள்ள விஜய் ரசிகர்களும் படத்தை கொண்டாடியுள்ளனர்.
அதில் சிலர், திருட்டுத்தனமாக மதுபானங்களை எடுத்து வந்து குடித்துவிட்டு எல்லை மீறி ஆட்டம் போட்டுள்ளனர். இதன் காரணமாக எழுந்த புகார புகாரை அடுத்து திரையங்கிற்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு, அங்கு கலாட்டா செய்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். இது குறித்து பதிவான விடியோக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.