“என்னை சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டார்” - மனம் திறந்த ’புவனா’
கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் கில்லி. படத்தில் நடிகர்கள் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான நடைத்திருந்த நிலையில் இப்படம் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வசூல் சாதனை புரிந்தது.
இன்றளவும் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக பார்க்கப்படும் கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக புவனா கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர் நடிகை நான்சி ஜெனிஃபர்.
அண்மையில் இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி படத்தில் நடித்த நடிகர்கள் நேர்காணல் மூலம் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசினார்கள்.
அதன்படி படத்தில் விஜய்க்கு தங்கையாக படு சுட்டியாக நடித்திருந்த நான்சி தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
“கில்லி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தை என்னால் மறக்கவே முடியாது. முதலில் இயக்குனர் தரணி சாருக்கு நன்றி விஜய் சார் நிஜமாகவே என்கிட்ட தங்கச்சி மாதிரிதான் பழகினார். என்னை அவருடைய சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டார்.
படத்தின் படப்பிடிப்பில் நானா சென்று யார்கிட்டேயும் பேச மாட்டேன்.யாரையும் தொல்லை பண்ண மாட்டேன். ஆனால், விஜய் சாரே என்னிடம் வந்து பேசுவார். படப்பிடிப்பின் செட்டில் எல்லார்கிட்டேயும் அவர் பேசியதை விட என்னிடம் இன்னும் ஸ்பெஷலா பேசியிருக்காரு.
நான் கில்லி படத்திற்கு முன்பே விஜய் சாருடன் “நேருக்கு நேர்” படத்தில் நடிச்சிருக்கேன். அடுத்ததாக கில்லி படத்தில் நடிக்கும் போது விஜய் சார் எக்ஸ்ட்ராவாக பல விஷயங்கள் சொல்லி கொடுத்தார். அவரிடம் இருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டேன் ” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நான்சி.