வலுக்கட்டாயமாக... பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் - தொடரும் கொடூரம்!

Chennai Sexual harassment Crime
By Sumathi Oct 05, 2022 06:40 AM GMT
Report

சென்னையில் 2 இடங்களில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்யும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் தொழில்

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில், பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு, வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும்

வலுக்கட்டாயமாக... பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் - தொடரும் கொடூரம்! | Police Arrested Those Who Engaged In Prostitution

இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்ததில் இந்தச் சம்பவம் உறுதி செய்யப்பட்டது.

5பேர் கைது

சோதனை மேற்கொண்டு, மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46), திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) ஆகிய இருவரை கைது செய்தனர். அங்கு ஒரு பெண் மீட்கப்பட்டு, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வலுக்கட்டாயமாக... பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் - தொடரும் கொடூரம்! | Police Arrested Those Who Engaged In Prostitution

அதனையடுத்து, திருவேங்கடசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் ஒரு பெண் மீட்கப்பட்டார். 6 செல்போன்கல் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி(50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி(38),நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி(34) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.