லைவில் ஆபாசம்.. செயலியில் சில்மிஷம், தமன்னா உட்பட 3 பேர் கைது - ஷாக்!
செயலி மூலம் ஆபாச வீடியோ வெளியிட்ட பெண்களை காவல் துறை கைது செய்துள்ளது.
ஆபாசம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் செயலி ஒன்றில் நேரலையில் சிலர் ஆபாச வீடியோக்களை பார்க்கின்றனர். இதில் ஒரு நபரிடம் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் வெர்சோவா போலீசாருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர், அப்பொழுது Pihu Official App என்ற செயலி மூலம் நேரலையில் ஆபாசம் காட்டுவது தெரியவந்தது.
மேலும், விடியோக்கள் வெர்சோவா பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து எடுத்து லைவாக ஒளிபரப்பு செய்வது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த பகுதியில் உள்ள 4 பங்களாக்களில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை
இந்நிலையில், லைவில் ஆபாச வீடியோ காண்பித்தது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் தனிஷா ராஜேஷ் கனோஜியா (வயது 20), தமன்னா ஆரிப் கான் (34) மற்றும் ருத்ரா நாராயண் ராவத் (27) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஆபாச வீடியோ பார்க்க விரும்பும் நபர்களிடம் ரூ.1000 முதல் ரூ.10000 வரை பெற்று கொண்டு ஆபாசம் காட்டியது தெரியவந்தது. இது குறித்து 3 பேர் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த செயலியின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.