அர்த்த ராத்திரியில் ஆபாச பேச்சு..கப்பல் ஏறிய மானம்
சமூக வலைதளத்தில் இளம்பெண் போல பேசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒரு கும்பல், சமூகவலைதளத்தில் பெண்கள் பெயரில் போலி கணக்கை உருவாக்கியுள்ளனர் .பின்னர் நல்ல பணம் உள்ள பணக்கார நபர்களை குறி வைத்துள்ளனர். அவர்களிடம் பெண் போல காம இச்சையை தூண்டும் வகையில் இவர்கள் பேசினர் .பின்னர் செல்போன் கேமராவின் முன் அவர்களை ஆபாச செயலில் ஈடுபட செய்து ,அதை பதிவு செய்துகொண்டனர். பிறகு இவர்கள் விரிக்கும் வலையில் வசமாக சிக்கும் பணம் படைத்தவர்களை மிரட்டி,ப்ளாக் மெயில் செய்து பணம் பறித்துள்ளனர் .
கடந்த 2 அல்லது 3 மாதங்களில் மட்டுமே அவர்களிடம் பலர் இவ்வாறு பணத்தை இழந்துள்ளனர். குறைந்தது பாதிக்கப்பட்டவர்களின் 250 ஆபாச வீடியோ கிளிப்பை பல்வேறு மாநிலங்களில் உள்ள 80 பேருக்கு விற்று பணம் சம்பாதித்து வந்து உள்ளனர். இந்த கும்பலிடம் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளார்கள் .
இது தொடர்பாக வட மாநிலத்தின் பல இடங்களில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .