கோவை போலீஸ் அக்கா திட்டம்..இனி மாநிலம் முழுவதும் - தலைமை செயலகம் அறிவுரை!

Tamil nadu Coimbatore Sexual harassment
By Swetha Sep 03, 2024 05:24 AM GMT
Report

'போலீஸ் அக்கா' திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் அக்கா 

கோவையில் செயல்படும் அனைத்துக்கல்லுாரிகளிலும், ஒரு பெண் போலீஸ் தொடர்பாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு போலீஸ் அக்கா என்று பெயரிட்டுள்ளனர். கல்லுாரி மாணவிகள் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டால்,

கோவை போலீஸ் அக்கா திட்டம்..இனி மாநிலம் முழுவதும் - தலைமை செயலகம் அறிவுரை! | Police Akka Scheme Will Be Implemented Statewise

தயக்கமின்றி அவரிடம் முறையிடலாம். சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பெண் போலீஸ் நடவடிக்கை எடுப்பார் என்பதே இந்த திட்டம் ஆகும். கல்வி நிறுவனங்களில் பாலியல் ரீதியாக பெண்கள்,

மாணவியர் துன்புறுத்தப்படுவதை தடுக்க கோவை நிர்மலா கல்லூரியில், தலைமை செயலாளர் முருகானந்தம் வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து கல்லுாரிகளிலும், உள்ளூர் புகார் குழு(ஐ.சி.சி., கமிட்டி) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

I'M SAFE: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பு கருதி விழிப்புணர்வு - மாரத்தான் போட்டி!

I'M SAFE: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பு கருதி விழிப்புணர்வு - மாரத்தான் போட்டி!

மாநிலம்

அதில் அளிக்கப்படும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்லுாரியிலும் போதை தடுப்பு கமிட்டி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

கோவை போலீஸ் அக்கா திட்டம்..இனி மாநிலம் முழுவதும் - தலைமை செயலகம் அறிவுரை! | Police Akka Scheme Will Be Implemented Statewise

மாதம் ஒரு முறை, அதன் செயல்பாடுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசகர்கள் நியமித்து கல்வி, அவர்களது சொந்த பிரச்னைகள், கல்வி மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.அவர்கள் தவிர,

மாணவர்கள் தங்களது சக வயதுடையவர்களிடம் பகிரும் விதமாக மாணவர்கள் இருவரை ஆலோசகர்களாக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும், உயர் மட்ட அளவில் உள்ள அலுவலர்கள் கல்லுாரிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை செயலகம்

முன்னதாக, கூட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி கல்லுாரிகளின் முதல்வர்கள், மருத்துவக் கல்லுாரி டீன்கள், இன்ஜினியரிங் கல்லுாரி, வனக்கல்லுாரி, பாரா மெடிக்கல், நர்சிங் கல்லுாரிகளின் முதல்வர் என, 700 பேர் பங்கேற்றனர்.

கோவை போலீஸ் அக்கா திட்டம்..இனி மாநிலம் முழுவதும் - தலைமை செயலகம் அறிவுரை! | Police Akka Scheme Will Be Implemented Statewise

கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., கார்த்திகேயன், மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, இத்திட்டம் கோவையில் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதாகவும்,

மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்து, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.