I'M SAFE: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பு கருதி விழிப்புணர்வு - மாரத்தான் போட்டி!
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடக்க உள்ளது.
I'M SAFE செயலி
பெண்களின் பாதுகாப்பிற்க்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி தான் I'M SAFE ஆப். இந்த ஆப் பெண்களுக்கு உதவும் முன்னெச்சரிக்கை கருவியாக பயன் படுத்தப்படுகிறது. இதில் SOS, ஹெல்ப்லைன், இருக்கும் இடத்தை டிராக் செய்வது போன்ற சில வசதிகள் உள்ளது.
இந்த செயலி நைட் ஷிப்ட்டில் வேலை செய்யும் பெண்கள், தனியாக டாக்ஸியில் செல்லும் பெண்கள் மற்றும் விடியற்காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் போன்ற பலருக்கு உதவியாக இருக்கும். மேலும், இந்த செயலி அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாரத்தான் போட்டி
இந்நிலையில், "இந்தியாவில் தெருக்களில் நள்ளிரவில் பெண்கள் பயமின்றி நடக்கும் போது தான் இந்தியா சுதந்திரமாக இருக்கும்" என்ற காந்தியின் கூற்றுக்கு ஏற்ப, 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்கள் பயமின்றி துணிந்து வெளியே நடமாடுவதற்காக ஒரு முன்னெடுப்பாக (freedom run) மாரத்தானை தொடங்க உள்ளது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, 5 கிமீ மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. மேலும், அது காலை 6 மணியளவில் island grounds என்ற பகுதியில் நடைபெறுகிறது.