போருக்கு ரெடி; ரஷ்யாவுக்கு எதிராக தயாராகும் போலந்து - என்ன காரணம்?
போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
நோட்டோ விரிவு
நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது, மற்றொரு நாடான போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, பதிலளித்துள்ள போலந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மத்தேயூஸ் மோராவியஸ்கி, ”ரஷ்யாவுடனான போர் தொடங்கினால், அதனை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது. எந்த ஒரு சூழலிலும் போர் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலந்து தயார்
அது எந்த அளவிற்கு மோசமானதாக இருக்கும் என்று கணித்து வரப்பட்டு வருகிறது. போலந்தில் உள்ள ஆயுதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சராக உள்ளதால் ஒவ்வொரு சொல்லையும் கவனித்தே பேசுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
நோட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவுப்படுத்த கூடாது என போலாந்து தலைநகர் 'வார்சாவில்' அமெரிக்காவை வைத்து ஒப்பந்தம் போட்டது ரஷ்யா. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்காவிடம் சென்று போலந்து நின்றது. இதனால் ஏற்கணவே போலந்து மீது ரஷ்யாவிற்கு கடும் அதிருப்தி இருந்தது.
மேலும், போலந்து அவ்வப்போது ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இத்தகைய காரணங்களால் போருக்கு தயாரான நிலைபாடை எடுத்திருக்கலாம் என அரசியம் விமர்சகர்கள் கூறுகின்றனர்.