ஏவுகணையை வைத்து புதின் என்னை மிரட்டினார் : போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி தகவல்

Boris Johnson Vladimir Putin
By Irumporai Jan 30, 2023 11:49 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஏவுகணையினை வைத்து ரஷ்ய அதிபர் புதின் தன்னை மிரட்டியதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியினை ராஜினாமா செய்தார்.இந்த நிலையில் பிரபல ஊடகமான பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் ரஷ்ய அதிபர் புதின் குறித்து கூறிய தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏவுகணையை வைத்து புதின் என்னை மிரட்டினார் : போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி தகவல் | Putin Threatened To Lob Missile Boris Johnson

போரிஸ் ஜான்சன் பிபிசிக்கு அளித்த  பேட்டியில் : உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும், நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே புதினுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன்.

வீடியோ கார்டியன்

[

புதின் மிரட்டினார்

மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காக உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோவில் சேராது என்றும் நான் புதினிடம் கூறினேன். ஆனால் ஒரு கட்டத்தில் புதின் என்னை மிரட்ட ஆரம்பித்தார் , அதாவது அவர் பேசும்போது போரிஸ் ஜான்சன், நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால்,ஏவுகணை மூலம்,அது ஒரு நிமிடம் நிகழலாம் என அவர் கூறியதாக போரிஸ் ஜான்சன் அதில் கூறியுள்ளார்.