47 வயதில் திருமணம் செய்த விஜய் பட நடிகர் - மணப்பெண் யார் தெரியுமா?
பிரபல நடிகர் சுப்பா ராஜு தனது 47 வது வயதில் திருமணம் செய்துள்ளார்.
சுப்பா ராஜு
எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சமி பாடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சுப்பா ராஜு, போக்கிரி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் ஜிதேந்தர் ரெட்டி' என்ற படம் நவம்பர் மாத தொடக்கத்தில் வெளியானது.
திருமணம்
தற்போது 47 வயதான நிலையில் சுப்பா ராஜு தனது காதலியை திருமணம் செய்துள்ளார். தனது மனைவியுடன் திருமணக்கோலத்தில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சுப்பா ராஜுவின் மனைவி ஷ்ரவந்தி தாபல், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் BDS, DDS மற்றும் MPH படித்து முடித்த பல் மருத்துவர் ஆவார். புதுமண தம்பதிகளுக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.