குடிச்சா சாவத்தான் செய்வார்கள்..அதுக்கு நிதியெல்லாம் வழங்க முடியாது - முதலமைச்சர் ஆவேசம்!
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு தர முடியாது என முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம்
மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்நிலையில், அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட 24 பேர் மதுகுடித்த இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

50 க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த மூன்று தினங்களில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் கொந்தளிப்பு
இச்சம்பவம் குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மதுபானம் குடிச்சா இறக்கத்தான் செய்வார்கள். இதற்கு எடுத்துக்காட்டு நம் கண் முன்னே இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவித நிதியும் வழங்க முடியாது.
குடிப்பழக்கத்திற்கு ஆதரவாக பேசுபவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் இருக்காது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.