போக்சோ: அவசரமாக கைது செய்யக்கூடாது - டிஜிபி எச்சரிக்கை!
போக்சோ வழக்குகளில் அவசரமாக கைது நடவடிக்கை கூடாது என சைலந்திரபாபு தெரிவித்துள்ளார்.
போக்சோ
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், குற்றவாளிக்கு குறைந்த பட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும்,
அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதில், திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது.
பாலியல் வன்முறை
அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். அனுமதி கட்டாயம்.
குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.