"கொலையை விட கொடூரமானது பாலியல் வன்கொடுமை" - போக்சோ நீதிமன்றம் கருத்து
கொலையை விட கொடூரமானது பாலியல் வன்கொடுமை என மும்பை போக்சோ நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 பேரை குற்றவாளிகள் என மும்பை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றொருவரான 28 வயது நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மனவளர்ச்சி சரியில்லாததால், சகோதரர்கள் பள்ளிக்கு சென்றுவிட சிறுமி வீட்டில் ஒற்றையில் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வேளைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தனது மனவளர்ச்சி குன்றிய மகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தாய் அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தபோது சிறுமி கடந்த காலத்தில் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி விவரித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
10.ரூ தருவதாக தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமானதால் இருவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளி வழக்கு நிலுவையில் இருந்தபோதே உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த போக்சோ நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தில்,
“பாலியல் வன்கொடுமை என்பது கொலையை விட கொடூரமானது என்றும், அக்கொடூரத்திற்கு ஆளாகி என்ன செய்வதென்று தெரியாமல் உதவியற்று இருக்கும் பெண்களின் ஆன்மாவையே அது அழித்துவிடக் கூடியது” என்றும் தெரிவித்தனர்.