சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஜாமீனில் வந்த இளைஞர் - செருப்பு மாலை போட்டு மக்கள் ஊர்வலம்!
போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
கர்நாடகா, தொட்டவாடா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகள் ஒருவர் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அனில் என்ற இளைஞர் அந்த சிறுமியை தனியாக அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
உடனே இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனில் கைது செய்யப்பட்டார். அதன்பின், அவர் ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றம் அனிலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
செருப்பு மாலை
இதனையடுத்து சிறையில் இருந்து 3 மாதங்களுக்குப் பின் இளைஞர் வெளியே வந்தார். இதனையடுத்து, கிராமத்திற்கு வந்த அந்த இளைஞரை சிறுமியின் குடும்பத்தினர் செருப்பால் தாக்கினர்.
பின்னர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
இதனை பலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.