குழந்தைகளை குறிவைக்கும் சுவாச நோய்; இன்னொரு பெருந்தொற்றா? எச்சரிக்கை!

Pneumonia China
By Sumathi Nov 24, 2023 06:36 AM GMT
Report

நிமோனியா போன்ற தொற்று நோய் வேகமாக பரவிவருகிறது.

நிமோனியா

சீனாவில் இருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மர்மமான நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

pneumonia spread in china

குறிப்பாக குழந்தைகள் அதிகளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டம் - எதற்கு தெரியுமா?

தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டம் - எதற்கு தெரியுமா?

WHO எச்சரிக்கை

தொடர்ந்து, நோய் எவ்வாறு பரவுகிறது, ஆய்வக முடிவுகள், குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுள்ளது. மக்களிடையே நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார ஆலோசனையையும் வழங்கியுள்ளது.

இந்த மர்ம நிமோனியாவில், குழந்தைகள் நுரையீரலில் வலி மற்றும் அதிக காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.