700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையம்- மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராமதாஸ்!

Dr. S. Ramadoss PMK Narendra Modi NEET
By Vidhya Senthil Aug 04, 2024 11:53 AM GMT
Report

 ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டன.

  முதுநிலை நீட் தேர்வு

முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் மையங்களை 700 கி.மீக்கு அப்பால் ஒதுக்கப்படுவது குறித்து  ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார் .இந்தியா முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டன.

700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையம்- மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராமதாஸ்! | Pmk Ramadoss Condemned Neet Pg Centers

அதனால் நீட் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்தனர். மொத்தம் 4 நகரங்களை தேர்வு செய்யும்படி அவர்களை கேட்டுக் கொண்ட தேசிய தேர்வு வாரியம், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது.

நீட் தேர்வில் சாதனை: டாப் 10 லிஸ்டில் 4 பேர் தமிழக மாணவர்கள் - ஆளுநர் வாழ்த்து!

நீட் தேர்வில் சாதனை: டாப் 10 லிஸ்டில் 4 பேர் தமிழக மாணவர்கள் - ஆளுநர் வாழ்த்து!

தேர்வு மையங்கள்

ஆனால், பல மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த 4 நகரங்களில் எதையும் ஒதுக்காமல் தொலைதூரத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதுநிலை நீட் தேர்வு மிகவும் கடினமானது. வினாக்களை நன்கு உள்வாங்கி விடை எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும்.

700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையம்- மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய ராமதாஸ்! | Pmk Ramadoss Condemned Neet Pg Centers

அதற்கு மன அமைதி தேவை. ஆனால், தேர்வு மையத்திற்கான பல நூறு கி.மீ பயணிக்க வேண்டிய நிலை இருந்தால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனவே, தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்து விட்டு, மாணவர்களை விருப்பம் தெரிவித்துள்ள 4 தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.