+2 தேர்வில் 2 முறை ஃபெயில்..ஆனால் நீட் தேர்வில் 705/720 மார்க் - சர்ச்சையில் சிக்கிய மாணவி!

Gujarat India
By Swetha Aug 02, 2024 09:30 AM GMT
Report

+2 தேர்வில் 2 முறை ஃபெயிலான மாணவி நீட் தேர்வில் 705/720 மார்க் பெற்றது சர்ச்சையை கிளப்பியது.

2 முறை ஃபெயில்..

நீட் தேர்வு முறைகேடு நாட்டின் அரசியல் மற்றும் சமூகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில், குஜராத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவி பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஃபெயில் ஆகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

+2 தேர்வில் 2 முறை ஃபெயில்..ஆனால் நீட் தேர்வில் 705/720 மார்க் - சர்ச்சையில் சிக்கிய மாணவி! | Girl Who Got Failed In 12Th Scored High In Neet

அதற்காக நடத்தப்பட்ட மறு தேர்விலும் ஃபெயில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு முறைகேடு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது - மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு முறைகேடு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது - மா.சுப்பிரமணியன்!


சிக்கிய மாணவி

இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 720 க்கு 705 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எனினும், மார்ச் மாதம் அவர் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அறிவியல் பாடங்களில் அவர் ஃபெயில் ஆகியுள்ளார்.

+2 தேர்வில் 2 முறை ஃபெயில்..ஆனால் நீட் தேர்வில் 705/720 மார்க் - சர்ச்சையில் சிக்கிய மாணவி! | Girl Who Got Failed In 12Th Scored High In Neet

அதற்காக அவர் சம்ப்ளிமெண்டரி எக்ஸாம் எனப்படும் மறுதேர்வையும் எழுதி இருக்கிறார். அதிலும் அவர் தோல்வி அடைந்துள்ளார். இந்த மறு தேர்வில் அறிவியல் பாடங்களான இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்களும் மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நீட் தேர்வில், வேதியியலில் 99.86 சதவீத மதிப்பெண்களும், இயற்பியலில் 99.89 சதவீத மதிப்பெண்களும், உயிரளியலில் 99.14 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 705/720 எடுத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.