மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸ் - தொண்டர்கள் அதிர்ச்சி!
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ்(86) திடீரென இன்று காலை(31.07.2024) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
2 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனை சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் எனவும், அதே போல் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் முடிவடைந்தவுடன், ராமதாஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.