வெற்றி சாத்தியமாகவில்லை.. களம் இன்னும் சாதகமாகவே உள்ளது - அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்து சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாமக தான் என்று அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி சாத்தியமாகவில்லை. வெற்றியை சுவைக்க முடியாதது எப்போதுமே வருத்தமளிக்கும் ஒன்று தான் என்றாலும்,
இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவும் இல்லை. இந்த தேர்தல் போரில் நாம் வெற்றியை இழந்திருக்கலாம். ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சதகமாகவே உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஸயத்தை தெளிவாக காட்டுகின்றன. ஆளும் திமுக அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, அதன் வாக்கு 2019 தேர்தலலை விட மூன்றில் 1 பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட அந்த கட்சியால் 2019ல் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது.
இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ் நாடு மக்கள் விரும்புவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும். தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
வீறு நடைபோடுவோம்
தமிழகத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான் என்றாலும் கூட, அதன் வளர்ச்சிக்காக 57 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. மதுவை விட பெரும் ஆபத்தாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளில் கூட கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் 4ட கஞ்சா போதையில் ஆசிரியர்களை தாக்கும் அவலம் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவை அதிகரிக்கவும் கஞ்சா போதையே காரணம்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்து சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாமக தான். தமிழ்நாடு அரசியலில் பாமக பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதே போல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது.
மக்கள் நம்மை வரவேற்கு தயாராக இருக்கிறார்கள் நானும் முதல் ஆளாக இருந்து உங்களை வழிநடத்துவதற்கு காத்திருக்கிறேன். 2026 தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறு நடைபோடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.