கூட்டணிக்கு ஓகே - ஆனால் பாமகவிடம் அதிமுக வைத்த demand..?
பாமாவிற்கு 6 மக்களவை மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கூட்டணி கணக்கு
தமிழக பிரதான திராவிட கட்சிகளை தவிர்த்து, பாமக, தேமுதிக போன்ற எந்த கட்சிகளின் கூட்டணிக்கு செல்லும் என்பது தான் தற்போது கவனம் பெற்ற ஒன்றாக உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியை உறுதிசெய்து விட்ட நிலையில், பாமக - தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் தங்களது முடிவை எடுக்கவில்லை.
இந்நிலையில், தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பாமக சம்மதித்தாகவும், அதிமுக பாமகவுக்கு 6 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம் அல்லது ஆரணி போன்ற தொகுதிகளை பாமகவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட பாமகவிற்கு அதிமுக நிபந்தனை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் பாமகவின் ராமதாசை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.