வீட்டிற்கே சென்று சந்தித்த சி.வி.சண்முகம் - ஒப்புக்கொள்ளுமா பாமக..? சந்திப்பின் பின்னணி..!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனி கூட்டணியை அமைக்கும் முனைப்பில், அதிமுக முயன்று வருகின்றது.
அதிமுக நாடாளுமன்ற தேர்தல்
வரும் நாடாளுமனற்ற தேர்தல் அதிமுகவிற்கு சற்று சவாலான ஒன்றாகவே அமைந்துள்ளது எனலாம். புதிய கூட்டணியை அமைக்கும் முனைப்பில் இருக்கும் அக்கட்சி தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வரை எந்தவித முன்னேற்றமும் அதில் இல்லை. பாமக, தேமுதிக கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க தான் அதிமுக முயற்சித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.
இந்த சூழலில் தான், அண்மையில் அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினர் சி.வி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து பேசியுள்ளார். திண்டிவனம் தைலாபுரில் அமைத்துள்ள ராமதாஸின் இல்லத்திற்கு நேரே சென்று அவரை சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார்.
ஆனால், அப்போது கூட்டணி குறித்து ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டதா..? என்ற எந்த தகவலும் வெளிவரவில்லை.