அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும் - ஜெயக்குமார் பேட்டி!

Tamil nadu ADMK D. Jayakumar
By Jiyath Jan 25, 2024 11:30 AM GMT
Report

அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   

தேர்தல் அறிக்கை

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள அதிமுக 4 முக்கிய குழுக்களை அண்மையில் அறிவித்தது.

அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும் - ஜெயக்குமார் பேட்டி! | Admk Election Manifesto Be Like This Jayakumar

அதில் அறிக்கை தயாரிக்கும் குழுவில் நத்தம் விஸ்வநாதன்,பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை உள்ளிட்ட 10 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த குழு, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தியது.

சூப்பர் ஹீரோ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "2021 ஆம் ஆண்டு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் ஏமாந்து விட்டனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும் - ஜெயக்குமார் பேட்டி! | Admk Election Manifesto Be Like This Jayakumar

இனி எதற்கும் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை மக்கள் நலன் சார்ந்த அறிக்கையாக இருக்கும். மாநில உரிமைகளை பேணிக் காக்கும் ஒரு அறிக்கையாக இருக்கும். தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கியுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் தெரிய வரும்" என்றார்.