பிரதமர் நிதியை வாங்கி கனவர்களை விட்டு காதலர்களுடன் ஓடிய பெண்கள்
பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதியை பெற்ற 4 திருமணமான பெண்கள் காதலர்களுடன் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆவாஸ் யோஜானா
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டம் என்பது ஏழைகளின் நகர்ப்புற வீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு பயனாளிகளின் கணக்குகளுக்கு பணத்தை செலுத்துகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இத்திட்டத்தின் கீழ் திருமணமான பெல்ஹாரா, பாங்கி, ஜைத்பூர், சித்தார் ஆகிய 4 பெண்களுக்கு முதல் தவனை பணம் அனுப்பப்பட்டது. ஆனால் இவர்கள் இந்த நிதியினை பெற்று கணவரை விட்டுவிட்டு, காதலர்களுடன் தப்பியோடியுள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்
இவர்களது வீடுகள் கட்டும் பணி தொடங்காத நிலையில் சம்பவம் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அதிகாரி சவுரப் திரிபாதி, நோட்டீஸ் அனுப்பி, வீடு கட்டும் பணியை உடனடியாக துவங்க உத்தரவிட்டும், அறிவிப்புக்கு பின், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, பெண்களின் கணவர்கள் இறுதியாக அரசு அதிகாரிகளிடம் தங்கள் மனைவிகள் அவர்களின் காதலர்களுடன் சென்றுவிட்டதாகவும், வீடு கட்டும் திட்டத்தின் இரண்டாவது தவணையை அவர்களின் கணக்கில் வரவு வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். தற்போது பணத்தினை எவ்வாறு வசூலிப்பது என்று அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.