பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? புகழாரத்தில் சூசகம்!

Narendra Modi Norway India
By Sumathi Mar 16, 2023 12:35 PM GMT
Report

 அமைதியை நிலைநாட்டக்கூடிய முக்கிய தலைவராக மோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

நார்வேயைச் சேர்ந்தவர் நோபல் பரிசுக்குழு உறுப்பினர் ஆஸ்லே டோஜே. இவர், அமைதிக்கான நோபல் பரிசின் போட்டியாளர்களில் முதன்மையானவர்களுள் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். மோதலில் உள்ள நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய, உலகின் மிகவும் நம்பகமான தலைவர்களில் ஒருவர்.

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? புகழாரத்தில் சூசகம்! | Pm Narendra Modi Top Contender Nobel Peace Prize

உக்ரைன் நெருக்கடியில் பிரதமர் மோடி உரிய நேரத்தில் தலையிட்டு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை எச்சரித்துள்ளார். உலகில் உள்ள எந்தவொரு பொறுப்புள்ள தலைவரும் இந்த செய்தியை தெரிவிக்க விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நோபல் பரிசு?

இந்தியா போன்ற சக்திவாய்ந்த நாட்டில் இருந்து வரும்போது இது மிகவும் முக்கியமானது. மோடி உலகெங்கிலும் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். பல ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றியுள்ளார். அது அவருக்கு உலகளவில் மிகுந்த மரியாதையை ஈட்டியுள்ளது.

வளரும் பொருளாதாரத்தில் இருந்து உலகின் முதன்மைப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியா உலகத்துடன் பேசும்போது, நட்புக் குரலுடனும், அச்சுறுத்தல்கள் இன்றியும் பேச முனைகிறது என புகழாரம் சூட்டியுள்ளார்.