திடீரென தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?

M K Stalin Narendra Modi Chennai
By Sumathi Mar 15, 2023 05:31 AM GMT
Report

மார்ச் 27 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிரதமர் மோடி

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் பயணிகள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவுள்ளது.

[MGLKBL[

அதற்குப்பின், பயணிகளின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து, 3.50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் 5 தளங்களுடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்படுகின்றன.

சென்னை வருகை

முதல் தளத்தில் சர்வதேச பயணிகள் வருகையும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், மார்ச் 27-ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, அங்கு காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த 2,500 பேரையும் கௌரவிக்க உள்ளார்.

அதன்பின், சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய விமான முனைய கட்டடத்தை திறந்து வைக்கிறார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.