இந்தியாவில் விரைவில் உலக கோப்பை கால்பந்து போட்டி : பிரதமர் மோடி
இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கத்தார் உலக கோப்பை
கத்தாரில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் அந்த போட்டி முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் இன்று மேகாலய மாநிலத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்தியாவில் விரைவில் உலக கோப்பை
அதில் அவர் பேசியபோது கத்தாரில் கால்பந்து உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடக்கிறது என்றும் இங்கு நாம் வளர்ச்சிக்கான போட்டிகள் இருக்கிறோம் என்றும் வெளிநாட்டு கால்பந்து அணிக்காக நாம் குரல் கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்தியா இது போன்ற சர்வதேச போட்டிகளை நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்