ஜனநாயக நாடுகளில் இது நடப்பது அரிதிலும் அரிது; 3-வது முறையாக உங்களுக்காக நான் - பிரதமர் மோடி!
ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று வாரணாசி சென்ற பிரதமர் மோடி, 20,000 கோடி ரூபாய்களை விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு செலுத்துவதை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "கங்கா தேவி என்னை மடியில் ஏந்திக் கொண்டது.
அரிதிலும் அரிது
இதனால் நான் வாரணாசியின் ஒரு பகுதியாகிவிட்டேன். வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர். ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது.
ஆனால் இந்திய மக்கள் அதை செய்துள்ளனர். பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.