அந்த பதவி மட்டும் வேண்டவே வேண்டாம் - சிறுவனிடம் சட்டென சொன்ன மோடி!

Narendra Modi Karnataka
By Sumathi May 03, 2023 03:49 AM GMT
Report

சிறுவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி

கர்நாடகா, 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

அந்த பதவி மட்டும் வேண்டவே வேண்டாம் - சிறுவனிடம் சட்டென சொன்ன மோடி! | Pm Narendra Modi Interacts With Kids In Kalabura

ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்பட பல கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியில் பிரசாரம் மேற்கொண்டார்.

வைரல் வீடியோ

அப்போது சிறுவர், சிறுமிகளை பார்த்த மோடி திடீரென அவர்கள் அருகே சென்று கலந்துரையாடினார். அதில், அவர்களின் எதிர்கால குறிக்கோள் என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு, போலீஸ், டாக்டர் எனவும், ஒரு சிறுவன் உங்களின் செயலாளர் என பதிலளித்தனர்.

இதற்கு பதிலளித்த மோடி, பிரதமர் பதவி மட்டும் வேண்டவே வேண்டாம் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இதை கேட்ட அனைவரும் சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.